ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டியவர் கைது: டெல்லியில் என்ஐஏ அதிரடி

புதுடெல்லி: டெல்லியில் தேசிய புலனாய்வு அமைப்பினர் நடத்திய அதிரடி சோதனையில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய நபர் கைது செய்யப்பட்டார். தேசிய புலனாய்வு அமைப்பினர் கர்நாடகா, மபி., உபி., உள்பட 6 மாநிலங்களில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகத்துக்குள்ளான நபர்களின் 13 இடங்களில் கடந்த 31ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். இந்நிலையில், நேற்று முன்தினம் டெல்லியின் பாட்லா ஹவுஸ் பகுதியில் தங்களது சோதனையை தொடர்ந்தனர்.

இதில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் உள்ள மொக்சின் அகமதுவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அகமது பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர்.இவர் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததும் அதற்காக நிதி திரட்டியதும் என்ஐஏ முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.  அகமது இந்தியா, வெளிநாடுகளில் ஐஎஸ் அமைப்பிற்காக நிதி திரட்டி, அதனை சிரியா மற்றும் பிற நாடுகளுக்கு கிரிப்டோகரன்சி வாயிலாக அனுப்பி வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மொக்சின் அகமதுவை அதிகாரிகள் கைது செய்தனர்.

Related Stories: