கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கல்வராயன்மலை அருகே உள்ள மணலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் 10கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் 170கும் மேற்பட்ட மலை கிராமங்கள் அமைந்துள்ளன. இந்நிலையில் கல்வராயன்மலையில் விட்டு விட்டு பெய்து வரும் கனமழை காரணமாக தற்போது கல்வராயன்மலை பகுதியில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மணலாற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக கள்ளக்குறிச்சி, சின்னசேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக கடும் வெள்ளப்பெருக்கை பொருட்படுத்தாமால், ஆபத்தை உணராமல் மணலாற்றை கடந்து செல்கின்றனர்.
