இந்து கோட்பாடுகளை பின்பற்றிய தலைவர்களின் புகைப்படம், சிலை கொண்டுவர திருப்பதியில் அனுமதி: தலைமை செயல் அதிகாரி அறிவிப்பு

திருமலை: மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரு பக்தர் சில நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்தபோது, காரில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் சிறிய சிலையை வைத்திருந்தார். இதனால், அலிபிரி சோதனைச்சாவடி ஊழியர்கள் அவர்களுக்கு அனுமதி மறுத்ததால் மோதல் ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் சர்ச்சை வெடித்தது.

இந்நிலையில், மகாராஷ்டிரா திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் மிலிட்கேசவ் நர்வேகர், திருமலை முகாம் அலுவலகத்தில்  தலைமை செயல் அதிகாரி தர்மாவிடம் சத்ரபதி சிவாஜி சிலையை நேற்று வழங்கினார்.

இதை பெற்றுக் கொண்ட பிறகு தர்மா கூறியதாவது:

ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், சத்ரபதி சிவாஜி போன்ற இந்து மத கோட்பாடுகளை கொண்டு செயல்பட்ட தலைவர்களின் சிலைகள், போட்டோ ஆகியவை கொண்டு வரலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

Related Stories: