சங்கரநாராயண சுவாமி கோயிலில் கொடியேற்றத்துடன் ஆடித்தபசு விழா துவக்கம்

சங்கரன்கோவில்: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயில் ஆடித்தபசு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு கொடிப்பட்டம் வீதி உலா நடந்தது. கோமதி அம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் காலை 5.32க்கு கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றது. எம்எல்ஏக்கள் ராஜா, கடம்பூர் ராஜூ உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, தினமும் காலை 9  மணிக்கு சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். 10ம் தேதி ஆடித்தபசு நடக்கிறது.

Related Stories: