தங்க மங்கையாக சாதித்த மீரா பாய் சானு

காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் மகளிர் பளுதூக்குதல் 49 கிலோ எடை பிரிவு பைனலில் நேற்று களமிறங்கிய நடப்பு சாம்பியன் இந்திய வீராங்கனை மீரா பாய் சானு மீண்டும் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். ஸ்நேட்ச் பிரிவில் 88 கிலோ எடை தூக்கி புதிய காமன்வெல்த் சாதனை படைத்த அவர், கிளீன் அண்டு ஜெர்க் முறையில் முதல் வாய்ப்பில் 109, 2வது வாய்ப்பில் 113 கிலோ எடை தூக்கி அசத்தினார். அவர் இந்த போட்டியில் மொத்தம் 201 கிலோ எடை தூக்கி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். பர்மிங்காம் தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கப் பதக்கமாக இது அமைந்தது. இந்தியாவுக்காக நேற்று பளுதூக்குதலில் பதக்கங்களை வென்ற சங்கேத் சர்கார், குருராஜா பூஜாரி மற்றும் மீரா பாய் சானுவுக்கு பிரதமர் மோடி, விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர், முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: