குஜராத்தில் கள்ளச்சாராய பலி 2 எஸ்பி.க்கள் இடமாற்றம் 6 போலீசார் சஸ்பெண்ட்

அகமதாபாத்:  குஜராத் மாநிலம், பொடாட் மற்றும் அகமதாபாத் மாவட்டங்களில் சமீபத்தில் கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இம்மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்பட்டு வந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிலர் மெத்தனாலை வாங்கி, அதனுடன் தண்ணீரை சேர்த்து நாட்டுச் சாராயம் எனக்கூறி ஒரு பாக்கெட்டை ரூ.20க்கு விற்றுள்ளனர். இது மிகவும் நச்சுத்தன்மை கொண்ட ராசாயனம். தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுவதாகும். இந்த சம்பவம் தொடர்பாக பொடாட், அகமதாபாத் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் (எஸ்பி.க்கள்) நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர். 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Related Stories: