சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கத் தகடு பதித்த கூரையில் நீர்க்கசிவு

திருவனந்தபுரம்: பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வருடம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தரிசனத்திற்காக வருகின்றனர். ஐயப்பனின் மூல விக்ரகம் அமைந்துள்ள கர்ப்பகிரகத்தின் மேற்கூரையில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டன. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையாவின் ஏற்பாட்டின் பேரில் இந்த தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த சில தினங்களாக கூரையில் இருந்து கோயிலுக்குள் தண்ணீர் ஒழுகுவது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கத் தகடுகளில் ஏற்பட்டு உள்ள சிறிய இடைவெளியில் இருந்து தண்ணீர் கசிந்து கோயிலுக்குள் புகுந்து வருகிறது. இதையடுத்து, தங்கக் கூரையை சீரமைப்பது குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆலோசித்து வருகிறது.

Related Stories: