மேற்குவங்க தொழிற்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது!: ஆசிரியர் பணி நியமன முறைகேட்டில் அமலாக்கத்துறை அதிரடி..!!

மும்பை: ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் தொடர்புடைய மேற்குவங்க தொழிற்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. மேற்குவங்கத்தில் ஆசிரியர் பணி நியமன முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக புகார் எழுந்ததையடுத்து, அமைச்சர்கள் பார்த்தா சட்டர்ஜி வீடுகளில் நேற்றைய தினம் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டனர்.

அதன் ஒருபகுதியாக  பார்த்தா சட்டர்ஜியின் உதவியாளர் அர்பிதா முகர்ஜியின் வீட்டிலும் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், அங்கிருந்து குவியல் குவியலாக சுமார் 20 கோடி ரூபாய் ரொக்கத்தை கைப்பற்றியுள்ளனர். அங்கிருந்து ஏராளமான செல்போன்களை பறிமுதல் செய்த அமலாக்கத்துறையினர், இன்று அர்பிதா முகர்ஜியை கைது செய்தனர். அதேபோல அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியை கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த சோதனையானது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

Related Stories: