அவர் இருந்தாலே எதிரணிகள் பயப்படும்...உலகக்கோப்பை டி.20 அணியில் கோஹ்லியை சேர்க்க வேண்டும்: ரிக்கி பாண்டிங் பேட்டி

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அளித்துள்ள பேட்டி:விராட் கோஹ்லிக்கு இது ஒரு கடினமான காலம் என்பதை நான் அறிவேன். அவருக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன. அனைத்து சிறந்த வீரர்களுக்கும் இதுபோன்ற நிலை ஏற்படும். நான் வீரராகவோ, கேப்டனாகவோ இந்தியாவுக்கு எதிராக நான் விளையாடுகிறேன் என்றால் பிளேயிங் லெவனில் கோஹ்லி இருந்தால் அச்சம் இருக்கும். அதுதான் அவர் ஏற்படுத்தி இருக்கிற தாக்கம். அவர் அணியில் இருந்தால் உலகில் உள்ள அனைத்து எதிரணியினருக்கும் பயமாக இருக்கும். எனவே உலகக்கோப்பை டி.20 தொடரில் ஃபார்மில் இல்லை என்றால் கூட அவரை விளையாட வைக்க வேண்டும்,நான் இந்திய அணி பயிற்சியாளராக இருந்தால் அவரின் நம்பிக்கையை மீட்க நடவடிக்கை எடுப்பேன்.

கோஹ்லி 3வது இடத்திலே விளையாட வேண்டும் என்று கூறி அவருடைய இடத்திற்கு உத்தரவாதம் அளிப்பேன். ரிஷப் பன்ட் அதிரடியான வீரர். அவர் 4வது இடத்தில் தான் விளையாட வேண்டும். தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினார். 5வது இடத்தில் அவருடைய அனுபவமும், அதிரடியும் கைகொடுக்கும். ஹர்திக் பாண்டியாவை 6வது இடத்தில் வைத்து விளையாடுங்கள். இதில் சூர்யகுமாருக்கு வேறு ஒரு இடத்தை கொடுங்கள். இப்படி இருக்கும்போது இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிரட்டலாக இருக்கும், என தெரிவித்துள்ளார்.

Related Stories: