உத்திரமேரூர் அருகே பழுதடைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தால் மக்கள் அச்சம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த வாடாநல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் அருகே பாழடைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் உள்ளது. இந்த வேளாண் கட்டிடத்தில் கடந்த சில ஆண்டுகளாக வாடாநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாயத்திற்கு தேவையான விதைகள், பயிர் மற்றும் உரங்களை பெற்று வந்தனர். இந்த கட்டிடம் பழுதடைந்திருந்ததால், உத்திரமேரூர் அருகே வேடபாளையம் பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய வேளாண் மைய கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சிதிலமடைந்துள்ள பழைய கட்டிடம், பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. தற்போது, இந்த கட்டிடத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அருகில் உள்ள பள்ளிக்கு, விஷ ஜந்துக்கள் செல்வதால் மாணவர்கள் பீதியில் உள்ளனர். அச்சத்துடனே, மாணவர்கள் கல்வி பயிலும் அவலநிலை உள்ளது. மேலும் இந்த விஷ ஜந்துக்கள், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் செல்வதால் பொதுமக்கள் அச்சத்துடனே உள்ளனர். மழை நேரங்களில் நீர் கசிவதால் இடிந்து விழும் நிலையிலும் உள்ளது. எனவே பழுதடைந்த இக்கட்டடத்தை அகற்றி, தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: