உலக சுகாதார அமைப்பிடம் 5 கோடி தடுப்பூசிகளை கேட்டது ஒன்றிய அரசு: கோவாக்ஸ் திட்டத்தில் இலவசம்

புதுடெல்லி: கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் 5 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை இலவசமாக வழங்கும்படி உலக சுகாதார அமைப்பிடம் ஒன்றிய சுகாதார அமைச்சகம் கேட்டுள்ளது. ஏழை மற்றும் வருமானம் குறைந்த நாடுகளிலும் கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக கிடைக்கச் செய்ய, உலக சுகாதார நிறுவனம், கோவாக்ஸ் திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு 10 கோடி கோவிஷீல்டு தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என

அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தியா இதுவரையில் இதை வாங்க பயன்படுத்தவில்லை.

இந்நிலையில், நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் அடுத்த 75 நாட்களுக்கு 18-59 வயதினருக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசி எனப்படும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. அதோடு, மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 5 கோடி தடுப்பூசியை இலவசமாக வழங்கும்படி உலக சுகாதார அமைப்புக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

* உலக சுகாதார அமைப்பு  இலவசமாக வழங்கும் 10 கோடி தடுப்பூசியை உரிய நேரத்தில் கேட்டு பெறாவிட்டால் அவை காலாவதியாகி வீணாகும் என கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் நிறுவனம் கடந்த ஏப்ரலில் எச்சரித்தது.

* இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவும், இதுவரையில் 98 நாடுகளுக்கு 23.5 கோடி டோஸ்களை நட்பு ரீதியாக இலவசமாக வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: