இள்ளலூர் கிராமத்தில் கிரிக்கெட் போட்டி

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம், இள்ளலூர் ஊராட்சியில் கிரீன் சிட்டி அரிமா சங்கம் சார்பில் உள்ளூர் இளைஞர்களுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. மொத்தம் 16 அணிகள் இதில் பங்கேற்கின்றன. லீக் சுற்று முறையில் நடத்தப்படும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ. 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கோப்பை வழங்கப்படுகிறது. இரண்டாம் பரிசாக 13 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கோப்பையும், மூன்றாக பரிசாக 4 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கோப்பை பரிசாக வழங்கப்பட உள்ளது. முதல் போட்டியை கிரீன் சிட்டி அரிமா சங்க தலைவர் சதாசிவம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இள்ளலூர் கிரிக்கெட் கிளப் பயர் பாய்ஸ் குழுவின் தலைவர் கங்காதரன், காயார் கோட்டீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

Related Stories: