திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி கூட்டுறவு சங்கத்தில் ₹30 லட்சத்திற்கு பருத்தி ஏலம்-குவிண்டால் ₹9,080க்கு விற்பனை

திருப்பத்தூர் : திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி கூட்டுறவு சங்கத்தில் ₹30 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது. ஒரு குவிண்டால் ₹9,080க்கு விற்பனை செய்யப்பட்டது.திருப்பத்தூர் மாவட்டம், மாடப்பள்ளியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. இதில் ஆண்டுதோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்தாண்டு 2வது முறையாக பருத்தி ஏலம் நேற்று நடைபெற்றது.

இதில், திருப்பத்தூர் ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, கந்திலி, வாலாஜா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பருத்தி அறுவடை செய்து 500 மூட்டைகள் பருத்தி ஏலத்தில் வைத்திருந்தனர். இந்த ஏலத்தை மடப்பள்ளி கூட்டுறவு சங்க தலைவர் தேவராசன் தொடங்கி வைத்தார். இதில், திருப்பூர், சென்னிமலை, கோயம்புத்தூர், அவிநாசி, உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள், நூல் மில் உரிமையாளர்கள் கலந்து ெகாண்டு போட்டி போட்டு பருத்தி ஏலம் எடுத்தனர்.

இதில், மொத்தம் ₹30 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. ஒரு குவிண்டால் ₹9,080க்கு விற்பனை செய்யப்பட்டது. உடனுக்குடன் விவசாயிகளுக்கு அதற்கான பணம் பட்டுவாடா செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து மாடப்பள்ளி உழவர் கூட்டுறவு சங்க தலைவர் தேவராசன் கூறுகையில், ‘அடுத்த வாரம் திங்கட்கிழமையும் பருத்தி ஏலம் நடைபெறும். இதுபோன்று வரும் 3 மாதங்கள் வரை நடைபெறும். ஏலத்தில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு கொடுக்கப்படும்’ என்றார்.

Related Stories: