ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த ரவிச்சந்திரன் தன்னை விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

சென்னை: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த ரவிச்சந்திரன் தன்னை விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்திருக்கிறார். பேரறிவாளனை விடுவித்ததைப் போலவே தன்னையும் விடுவிக்க வேண்டும் என சிறையில் உள்ள ரவிச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த ஏழுவரில் பேரறிவாளன் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து தன்னையும் அது போலவே விடுவிக்கவேண்டும் என சிறையில் உள்ள ரவிச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். தன்னை விடுவிக்க தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிய போதும் அதை கணக்கில் கொள்ளாமல் உயர்நீதிமன்றம் தனது மனுவை தள்ளுபடி செய்திருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 பேரறிவாளனை சிறையில் இருந்து உச்சநீதிமன்றம் விடுவித்தது.அதுபோலவே ரவிச்சந்திரனும் மனுதாக்கல் செய்திருக்கிறார். பேரறிவாளனை எந்த அடிபடையில் உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததோ, அதன் அடிபடையில் தன்னையும் சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என ரவிச்சந்திரன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.

தமிழக அரசு ஏழு பேர் விடுதலை சம்பந்தமாக நிறைவேற்றிய தீர்மானத்தை கவனத்தில் கொள்ளாமல் சென்னை உயர்நீதிமன்றம் தனது விடுதலை மனுவை தள்ளுபடி செய்திருப்பதாகவும்,எனவே என்னையும் சிறையில் இருந்து விடுதலை செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று ரவிச்சந்திரன் தனது மனுவில் கேட்டுக் கொண்டிருக்கின்றார். ரவிச்சந்திரன் தனது மனுவை விசாரிக்கபடும் வரை தனக்கு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்.

Related Stories: