பாஜக ஆளும் மாநிலத்தில் மதுகொள்கையை மாத்துங்க!: மாஜி பெண் முதல்வர் நட்டாவுக்கு கடிதம்

போபால்: பாஜக மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான உமா பாரதி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘கட்சியின் விதிகளுக்கு எதிராக நான் செல்லமாட்டேன் என்பதும் உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் மதுக்கொள்கை விஷயங்களில் நான் சமரசம் செய்து கொள்ள மாட்ேடன். ஏனென்றால் அவை எனது நம்பிக்கையுடன் தொடர்புடையது. சவுகான் அரசின் மதுபானக் கொள்கை விவகாரம் குறித்து நான் பேசும் போதெல்லாம், நான் கேலிக்கு ஆளாக்கப்படுகிறேன். நேர்மறையான முடிவுகள் எடுக்கப்படும் என்று நம்புகிறேன்.

மத்திய பிரதேசத்தில் மது விற்பனையை தடை செய்ய வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம் அல்ல; அவ்வாறு செய்தால் பெண்களுக்கு கொடுக்கும் மரியாதையாக இருக்கும். அவர்களின் குடும்பங்கள் பாதுகாப்பாக இருக்கும். இளைஞர்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூக நல்லிணக்கம் ஏற்படும். எனவே எனது இந்த கோரிக்கையை ஏற்று, பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களுக்கும் ஒருங்கிணைந்த மதுக் கொள்கையை உருவாக்க வேண்டும்’ என்று அந்த மூன்று பக்க கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: