ஆம்ஸ்டெல்வீன்: 15வது பெண்கள் உலக கோப்பை ஹாக்கி நெதர்லாந்து மற்றும் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. `பி’ பிரிவில் இடம் பிடித்த இந்தியா முதல் போட்டியில் இங்கிலாந்திடம் 1-1, 2வது போட்டியில் சீனாவிடம் 1-1 என டிரா கண்டது. கால் இறுதிக்கு வெற்றிபெற கட்டாய வெற்றி நெருக்கடியில் நேற்று கடைசி போட்டியில் நியூசிலாந்துடன் மோதியது. இதில் 4-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.