ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்த வழக்கு: 3 பேருக்கு 12 ஆண்டு சிறை

சென்னை: 2020-ல் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் 3 பேருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 3 பேருக்கும் 12 ஆண்டு சிறை மற்றும் தலா ரூ.2 லட்சம் அபராதமும் சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விதித்தது. பவுடர் ரவி, சின்னத்துரை, பாம்பு நாகராஜ், ஆகியோருக்கு தண்டனை விதித்து நீதிபதி திருமகள் தீர்ப்பு அளித்தார். 

Related Stories: