கோயில்களில் திருமண பதிவு, சமூக நலத்துறையின் உதவித்தொகை பெற இ-சேவை மூலம் திருமணமாகாதவர் சான்று வழங்க வேண்டும்: வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம்

சென்னை: கோயில்களில், திருமண பதிவுக்காகவும், சமூக நலத்துறையினரின் திருமண உதவித் தொகை வழங்குவதற்கும் முதல் திருமண சான்றுக்கு பதிலாக வருவாய்த்துறையின் இ-சேவை மூலமாக திருமணமாகாதாவர் சான்று வழங்கப்படுகிறது. எனவே, இது தொடர்பாக தங்களது துறையில் உள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குமாறு வருவாய் நிர்வாக ஆணையர் பதிவுத்துறை ஐஜி சிவன் அருளுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் பதிவுத்துறை தலைவர் சிவன் அருளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை வரையறைக்குட்பட்ட கோயில்களில் திருமணப் பதிவுக்காகவும், சமூக நலத்துறையினர் திருமண உதவித் தொகை வழங்குவதற்கும் முதல் திருமணச்சான்றுக்கு பதிலாக வருவாய்த்துறையின் இ-சேவை வாயிலாக நாளது தேதியில் வழங்கப்பட்டு வரும் திருமணமாகாதவர் சான்றிதழை மனுதாரர்களிடம் பெற்று அதன் அடிப்படையில் நடவடிக்கை உங்களது துறையில் தொடர்புடைய அலுவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்குமாறும் இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன். மேலும் இனி வருங்காலங்களில் முதல் திருமணச் சான்று வழங்கக் கூடாது என விஏஓக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: