கூடலூர் அக்ரஹாரம் சாலை பிரிவில் குப்பை கொட்டுவதால், சுகாதார சீர்கேடு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கூடலூர்: கூடலூர் நகராட்சிக்குட்பட்ட கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து நேரடியாக குப்பை லாரிகளுக்கு குப்பைகளை வழங்கும் திட்டம் கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இதற்காக சுமார் 20க்கும் மேற்பட்ட குப்பை சேகரிக்கும் வாகனங்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இருப்பினும் கூடலூர் அக்ரஹாரம் சாலை சந்திப்பு பகுதியில் தொடர்ச்சியாக இரவு மற்றும் காலை நேரங்களில் சாலை ஓரத்தில் இப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதேபோல் பெட்ரோல் பங்க் எதிர்ப்புறம், தேவர் சோலை சாலை மற்றும் கள்ளிக்கோட்டை சாலை பகுதிகளிலும் சாலை ஓரங்களில் குப்பைகள் சாலையில் கொட்டப்பட்டு வருகின்றன.

இதனால் இப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு குப்பைகளை அள்ளும் தொழிலாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது. எனவே நகராட்சி நிர்வாகம் இப்பகுதியில் குப்பை கொட்டுவதை தடை செய்ய கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு சுகாதாரத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: