அமர்நாத் புனித யாத்திரை தொடங்கியது: காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஜம்மு: அமர்நாத் புனித யாத்திரை நேற்று தொடங்கியது. இந்த யாத்திரையையொட்டி காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரில் புகழ்பெற்ற அமர்நாத் புனித யாத்திரை, கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாதநிலையில் இந்த ஆண்டு நடைபெறுகிறது. இந்நிலையில் அமர்நாத் குகைக் கோயிலுக்குச் செல்லும் முதலாவது குழுவின் பயணத்தை காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா நேற்று தொடங்கிவைத்தார்.

ஜம்மு நகரில் உள்ள பகவதிநகர் முகாமில் இருந்து புறப்பட்ட 4 ஆயிரத்து 890 பக்தர்களின் 176 வாகனங்களை அவர் கொடியசைத்து தொடங்கினார். பகல்காம் மற்றும் பதால் அடிவார முகாம்களை அடையும் அந்த பக்தர்கள் குழுவினர், அங்கிருந்து தங்கள் 43 நாள் புனித யாத்திரையை இன்று தொடங்குவார்கள். வருகிற ஆகஸ்டு 11ம் தேதி ரக்‌ஷா பந்தன் தினத்தன்று இந்த யாத்திரை நிறைவுபெறும்.

இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரைக்கு 3 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பதிவு செய்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த யாத்திரையையொட்டி காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Stories: