கேரளாவில் யானை தாக்கியதில் தனியார் மலையாள செய்தி சேனலின் கேமராமேன் உயிரிழப்பு

கேரளா: கேரளாவில் பணியில் இருந்தபோது யானை தாக்கியதில் தொலைக்காட்சி கேமராமேன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் தனியார் மலையாள செய்தி சேனலின் பாலக்காடு ஒளிப்பதிவாளர் ஏ.வி.முகேஷ், யானைகளின் இயற்கையான வாழ்விடங்களில் இருக்கும் காட்சிகளை படம்பிடித்துக் கொண்டிருந்துள்ளார்.

மாத்ருபூமி செய்தியின் ஒளிப்பதிவாளர் ஏ.வி. முகேஷ் (34) தாக்குதல் நடந்தபோது மற்ற பத்திரிகையாளர்களுடன் படப்பிடிப்பில் இருந்துள்ளார். மலம்புழாவில் காலை 8 மணியளவில் விவசாய நிலத்தில் யானை தாக்குதல் நடத்துவது குறித்து செய்தி சேகரிக்க ஊடகக் குழுவினர் சென்றுள்ளனர். வனப்பகுதிக்குள் சுமார் 200 மீட்டர் தொலைவில் யானை ஒன்று ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக வன அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாக்குதலில் இருந்து தப்பிக்க குழு உறுப்பினர்கள் ஓடியபோது, ​​முகேஷ் கால் தடுமாறி விழுந்துள்ளார். அப்போது யானை மிதித்து தாக்கியுள்ளது. யானை தாக்கியதில் பலத்த காயம் அடைந்த முகேஷ், பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் ஊடகத்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

The post கேரளாவில் யானை தாக்கியதில் தனியார் மலையாள செய்தி சேனலின் கேமராமேன் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: