மண்ணூர் கிராமத்தில் கஞ்சா: வடமாநில இளைஞர் கைது

ஸ்ரீபெரும்புதூர்: மண்ணூர் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞரை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மண்ணூர் பகுதியில் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தனியார் தொழிற்சாலை அருகே நின்றிருந்த இளைஞர் ஒருவர், போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார். இதனால், சந்தேகமடைந்த போலீசார் இளைஞரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சதம் மகர்ணா (32) என்பதும், இவர் ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து மண்ணூர் பகுதியில் உள்ள வடமாநில இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து வாலிபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: