நாகர்கோவில் மாநகராட்சியில் 8 இடங்களில் பூங்கா

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க 8 இடங்களில் சாலையோர பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன. நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டப்படுவதை தடுக்கும் வகையில், கடந்த 4 ஆண்டுகள் முன்பு அப்போதைய ஆணையர் சரவணக்குமார் முயற்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், குப்பைகள் கொட்டும் பகுதி சுத்தம் செய்யப்பட்டு, கோலமிட்டு செடிகள் நடப்பட்டன.

 இந்த நிலையில், தற்போது அவ்வை சண்முகம் சாலையில், குப்பைகளை கொட்டுவதை தடுப்பதுடன், மக்கள் இயற்கை உபாதைகளை சாலையோரம் கழிப்பதை தடுக்கும் வகையில், சாலையோர பீங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு வரவேற்பு இருந்துள்ளதை அடுத்து, மாநகராட்சியில் 8 இடங்களில் ஒரு கோடி  மதிப்பீட்டில் சாலையோர பூங்காக்கள் அமைக்கப்படும் என்று மேயர் மகேஷ் அறிவித்துள்ளார்.

அதன்படி, அலங்கார தளஓடுகள் மூலம் நடைபாதை, பெஞ்சுகள், அலங்கார தூண்களுடன் கூடிய சுற்றுச் சுவர் போன்ற அம்சங்களுடன், இந்த நடைபாதை அமைக்கப்பட உள்ளன என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

இது தொடர்பாக மேயர் மகேசிடம் கேட்டபோது அவர் கூறியது: நாகர்கோவில் நகரை தூய்மையாக வைக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி குப்பைகள் கொட்டப்பட்ட பகுதிகளில் 8 பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 4 இடங்களில் பூங்காக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: