மருத்துவமனைக்குள் புகுந்து பச்சிளம் குழந்தையை கடித்துக் கொன்ற நாய்

சண்டிகர்: உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணி, அரியானா மாநிலம் பானிபட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்ந்திருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் இரவு, அந்த சிசுவுடன் அதன் பாட்டி,   தரையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது மருத்துவமனைக்குள் புகுந்த ஒரு தெருநாய், குழந்தையை கவ்விக்கொண்டு வெளியே சென்றுவிட்டது. அதை யாருமே கவனிக்கவில்லை.

 இந்நிலையில் கண்விழித்த பாட்டி, குழந்தையைக் காணாமல் பதறி மற்றவர்களை உஷார்படுத்தினார். மருத்துவமனை கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிசுவை தெருநாய் கவ்விச் சென்றது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு வெளியே தேடியபோது, நாயால் கடித்துக் குதறப்பட்ட சிசு இறந்துகிடந்தது. நெஞ்சைப் பதறவைக்கும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: