செங்கல்பட்டு அருகே பேருந்து நிறுத்தத்தில் காந்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே 20 வயது பெண்ணை கடத்தி வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். ஆத்தூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் கடந்த 25ம் தேதி செங்கல்பட்டு-காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்குவந்த ஆத்தூர் வடப்பாதை பாலையம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் அந்தப்பெண்ணை கடத்தி வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் அளித்த புகாரின் பேரில் முக்கிய குற்றவாளியான சரவணனை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவரது நண்பர்கள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமான பள்ளி மாணவியை வன்கொடுமை செய்து அந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றி விடுவேன் எனக் கூறி, மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். மொடக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவிக்கு ஷேர்சாட் என்ற சமூக வலைதள செயலி மூலம் கோவையை சேர்ந்த ஜேசுதாஸ் அறிமுகமாகி உள்ளார்.

இருவரும் செல்போன் எண்ணை பகிர்ந்து நட்பாக பேசிவந்த நிலையில், யாரும் இல்லாத நேரத்தில் மாணவியின் வீட்டிற்கு வந்த ஜேசுதாஸ், வலுக்கட்டாயமாக அவரை வன்கொடுமை செய்திருக்கிறார். மேலும் அதனை மாணவிக்கு தெரியாமல் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதன்பின் ஜேசுதாஸின் நடவடிக்கை பிடிக்காததால் அவருடன் பேசுவதை மாணவ நிறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜேசுதாஸ், மாணவியுடன் எடுத்துக்கொண்ட அந்தரங்க புகைப்படங்களை அவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி மிரட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, தனது தந்தையிடம் நடந்ததை கூறவே அவர் அளித்த புகாரின் பேரில் ஜேசுதாஸை போலீசார் கைது செய்தனர்.        

Related Stories: