மாநிலங்களவை எம்பி.க்கள் 31% பேர் மீது குற்ற வழக்கு: சராசரி சொத்து மதிப்பு ரூ.79.54 கோடி

புதுடெல்லி: மாநிலங்களவையில் பதவியில் உள்ள எம்பி.க்களில் 31% பேர் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது. ஒரு எம்பி.யின் சராசரி சொத்து மதிப்பு ரூ.79.54 கோடி என்று தெரிய வந்துள்ளது. ஜனநாயக சீர்திருத்துக்கான அமைப்பு மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு இணைந்து நடத்திய ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:மாநிலங்களவையில் மொத்தமுள்ள 233 எம்பி.க்களில், பதவியில் உள்ள 226 பேர் மீதான குற்ற வழக்கு, நிதி ஆதாரங்கள், சொத்து மதிப்பு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது பதவியில் உள்ள 197 எம்பி.க்களில் (87%) கோடீஸ்வரர்கள் என்பதும், இவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.79.54 கோடி என்றும் தெரிய வந்துள்ளது. 226 பேரில் 71 எம்பி.க்கள் (31%) மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், 2 பேர் மீது கொலை வழக்குகளும், 4 எம்பி.க்கள் மீது கொலை முயற்சி வழக்குகளும் பதிவாகி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: