தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் நடந்த 83 பவுன் தங்க நகை கொள்ளையில் 2 தனிப்படைகள் விசாரணை-கைரேகைகள் சிக்கின

நாகர்கோவில் : நாகர்கோவிலில் நடந்த தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் 2 கைரேகைகள் சிக்கி உள்ளன. இது தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.நாகர்கோவில் கோட்டார் வடலிவிளையை சேர்ந்தவர் ஆண்டேஸ்வரன் (50). இவர் தனியார் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரேமா (45). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பிரதீஷ் சென்னையில் உள்ள கல்லூரியில் பிடெக் படித்து வருகிறார்.

மகனை பார்ப்பதற்காக இரு வாரங்களுக்கு ஒருமுறை ஆண்டேஸ்வரன் தனது குடும்பத்துடன் சென்னை செல்வது வழக்கம். அதே போல் கடந்த 24ம்தேதி மாலையில் ஆண்டேஸ்வரன், அவரது மனைவி மற்றும் இளைய மகன் யோகேஷ் ஆகியோருடன் சென்னை சென்றார். இவர்கள் வீட்டில் நாய் வளர்த்து வருகிறார்கள். எனவே நாய்க்கு உணவு வைப்பதற்காக, தனது வீட்டின் அருகில் வசித்து வரும் சந்திரா என்பவரை ஏற்பாடு செய்திருந்தனர்.

 நேற்று முன் தினம் (26ம்தேதி) மாலை சாப்பாடு வைக்க வரும் போது நாயை காணவில்லை. இதையடுத்து சந்திரா தேடிய போது, நாய் வீட்டின் பின்புறம் வழியாக வந்தது. வீட்டின் பின்புற கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்திரா, ஆண்டேஸ்வரனின் மனைவி பிரேமாவுக்கு தகவல் தெரிவித்தார். அவர் சென்னையில் இருந்து வந்து கொண்டிருப்பதாக கூறினார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு 11.30 மணியளவில் தான் ஆண்டேஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டுக்கு வந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. உள்ளே லாக்கரில் இருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 83 பவுன் தங்க நகைகளும், ஒன்றரை கிலோ வெள்ளியும் திருடப்பட்டு இருந்தன. சில நகைகள் வீட்டில் சிதறி  கிடந்தன.கொள்ளை போன நகைகளின் மொத்த மதிப்பு சுமார் O25 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்ததும் கோட்டார் போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர். டி.எஸ்.பி. நவீன்குமார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தார். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடந்தது. ஆண்டேஸ்வரன், குடும்பத்துடன் வெளியூர் செல்வதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். வீட்டில் நாய் வளர்க்கப்படுகிறது என்பது தெரிந்து, நாய்க்கு மயக்க மருந்து கொடுத்து கைவரிசை காட்டி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இன்ஸ்பெக்டர்கள் ராமர், திருமுருகன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கைரேகை நிபுணர்கள் நடத்திய ஆய்வில் 2 வித கைரேகைகள் சிக்கி உள்ளன. இந்த கைரேகை பதிவுகளை ெகாண்டு விசாரணை நடந்து வருகிறது. 24ம் தேதி மாலை தான் ஆண்டேஸ்வரன் குடும்பத்துடன் கிளம்பி உள்ளார். எனவே அன்றைய தினம் இரவு ெகாள்ளை நடந்ததா? அல்லது 25ம்தேதி இரவு கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருப்பார்களா? என்பது சந்தேகமாக உள்ளது. இந்த கொள்ளை சம்பவம் தற்போது நாகர்கோவில் நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கண்காணிப்பு கேமரா உபகரணங்கள் திருட்டு  

கொள்ளை நடந்த ஆண்டேஸ்வரன் வீட்டில் முன் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. கேமராக்கள் இருப்பது கொள்ளையர்களுக்கு தெரிந்திருக்கிறது.  வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் கேமராவில் காட்சிகள் பதிவாகும் ஹார்டு டிஸ்க் மற்றும் ரிசிவர்  உபகரணங்களையும் திருடி சென்றனர். இதனால் கேமரா காட்சிகளை பார்க்க முடிய வில்லை. இதனால் ஆண்டேஸ்வரன் வீட்டு அருகில் உள்ள சில கட்டிடங்கள், வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள்  உள்ளன. அந்த கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். ஏற்கனவே நாகர்கோவிலில் இதே போல் 2, 3 வீடுகளில் நடந்த ெகாள்ளை சம்பவங்களில்  கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகும் ஹார்டு டிஸ்க் திருடப்பட்டன என்பது  குறிப்பிடத்தக்கது.

Related Stories: