துறையூர் அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளை-மர்ம நபர்களுக்கு வலை

துறையூர் : துறையூர் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சிக்கத்தம்பூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (53) விவசாயி. இவர் நேற்று முன்தினம் மதியம் தண்டலைப்புத்தூரில் உள்ள தனது மகள் சௌந்தர்யா வீட்டிற்கு மனைவி சரோஜாவுடன் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறக்கப்பட்டு இருப்பதாக அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்தனர்.

இதன் பேரில் உடனே வீட்டிற்கு வந்த சுப்பிரமணி உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு 3 பவுன் செயின் 2, மோதிரம் 1 பவுன், தோடு 6 கிராம் நகைகள் மற்றும் ரூ.49 ஆயிரம் ரொக்கம் ஆகியவை மர்ம நபர்களால் திருடு போனது தெரியவந்தது.இதையடுத்து சுப்பிரமணி அளித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: