வருசநாடு கிராமத்தில் வாறுகால் கட்டமைப்பை மேம்படுத்த கோரிக்கை

வருசநாடு: வருசநாடு ஊராட்சிக்குட்பட்ட காளியம்மன் கோயில் கிழக்குத்தெரு பகுதியில் சுமார் 600க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இங்குள்ள வாறுகாலில் சாக்கடைநீர் தேங்கி பல மாதங்களாக துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் இப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக புகார் எழுந்துள்ளது.

இந்த புகாரினை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் வருசநாடு ஊராட்சி நிர்வாகத்திடமும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுபற்றி கிராமவாசிகள் கூறுகையில், சாக்கடை கழிவுநீரை அகற்றக் கோரி பலமுறை பொதுமக்கள் சார்பில் புகார் மனு ஊராட்சி நிர்வாகத்திடம் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

எனவே விரைவில் புதிய சாக்கடை வடிகால் அமைத்து கழிவுநீரை மற்ற பகுதிகளுக்கு கடத்தி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் வாறுகால் கட்டமைப்பை மேம்படுத்தினால் தான், தொற்றுநோய்கள் பரவாமல் நிம்மதியாக வாழ முடியும், என்றனர்.

Related Stories: