சிங்கம்புணரியில் கலர் கோழிகுஞ்சு விற்பனை ஜோர்

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் சிறுவர்களை கவரும் கலர் கோழிக்குஞ்சு விற்பனை ஜோராக நடந்து வருகிறது.சிங்கம்புணரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில், நாமக்கல், சேலம் பகுதியிலிருந்து ஏராளமான கலர் கோழி குஞ்சு விற்பனையாளர்கள் தங்கி கோழி குஞ்சுகளை விற்பனை செய்து வருகின்றனர். பள்ளிக்கூடம் உள்ள பகுதிகள், பொது இடங்களில் விற்பனை செய்யப்படும் கோழிக்குஞ்சுகளை சிறுவர்கள், பெரியவர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

கிரிராஜா, போந்தா, லக்கான், நாட்டுக்கோழி குஞ்சு என பல்வேறு கோழிக்குஞ்சுகளை ஐந்து ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, பள்ளிகள் முடிந்து செல்லும் போது மாணவர்கள் ஆர்வத்துடன் வாங்குகின்றனர். ஒரு வாரமாக சிங்கம்புணரி பகுதியில் கலர் கோழிக்குஞ்சுகளை தெருக்களிலும் சாலைகளிலும் விற்பனை செய்து வருகிறோம் என்றனர்.

Related Stories: