பள்ளி மாணவியை கர்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

மாமல்லபுரம்: கல்பாக்கம் அடுத்த வாயலூர் கிராமத்தில் வசித்து வரும் 16 வயது சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவரிடம், அதே பகுதியை சேர்ந்த விக்ரம் (24), என்பவர் உயிருக்கு உயிராக காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொண்டு கடைசி வரை வாழ்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை, நம்பிய மாணவி அந்த வாலிபருடன் நெருங்கி பழகி உள்ளார். இதனை பயன்படுத்தி, விக்ரம் மாணவியிடம் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இதனால், 2 மாதம் கர்ப்பம் அடைந்தார்.

இதுகுறித்து தனது பெற்றோரிடம் நடந்தவைகளை கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து, மாணவியின் பெற்றோர் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மகளிர் போலீசார் வழக்கு பதிந்து மாணவியை கர்ப்பமாக்கிய விக்ரம்  நேற்று மாலை பிடித்து வந்து போக்சோ வழக்குப் பதிந்து, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.

Related Stories: