கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உல்லாசத்துக்கு அழைத்து சென்று வாலிபரை தாக்கி பணம், ஏடிஎம் கார்டு பறித்த பெண்கள்

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ் (27). இவருக்கு திருமணம் ஆகவில்லை. சென்னை வடபழனியில் ஒரு தனியார் விடுதியில் சுரேஷ் தங்கி, சமையல் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு காஞ்சிபுரத்துக்கு செல்ல சுரேஷ் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்து, காஞ்சிபுரம் செல்லும் பேருந்துக்காக காத்திருந்தார்.

அப்போது அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஆசைவார்த்தை கூறி, சுரேஷை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். இதில் சபலமான சுரேஷ் அப்பெண்ணுடன் தாம்பரத்தில் ஒரு வீட்டுக்கு சென்றிருக்கிறார். அங்கு ஏற்கெனவே 3 பெண்கள் இருப்பதை பார்த்து சுரேஷ் அதிர்ச்சியானார்.

இதில் சுரேஷ் சுதாரிப்பதற்குள், 4 பெண்களும் சேர்ந்து சுரேஷை சரமாரி தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்து ரூ. 5 ஆயிரம், ஏடிஎம் கார்டுகளை 4 பெண்களும் பறித்து கொண்டு துரத்திவிட்டனர். இதுகுறித்து கோயம்பேடு போலீசில் சுரேஷ் புகார் அளித்தார்.

 இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோயம்பேடு பேருந்து நிலைய சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் தலைமறைவான 4 பெண்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: