முன்னணி வீரர்கள் இல்லாத விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் இன்று போட்டி அட்டவணை வெளியீடு: தரவரிசை புள்ளிகளும் கிடையாது

லண்டன்: பழமையான கிராண்ட் ஸ்லாம் போட்டியான  விம்பிள்டன் ஓபன் ஜூன் 27ம் தேதி தொடங்குகிறது. அதற்கான போட்டி அட்டவணை இன்று வெளியாகிறது. போட்டியில் இரட்டையர், கலப்பு இரட்டையர், என பல பிரிவுகள் இருந்தாலும்,  ஒற்றையர் பிரிவுக்குதான் எதிர்பார்ப்புகள் அதிகம். பரிசுத் தொகையும் பல மடங்கு. இந்நிலையில் விம்பிள்டன் ஒற்றையர் பிரிவுகளில் பங்கேற்க 104 பேர் தரவரிசையின் அடிப்படையில் நேரடியாகவும், 16பேர் தகுதிச் சுற்றுகள் மூலமாகவும் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதில் உலகின் நெம்பர் ஒன் வீராங்கனை ஸ்வியாடெக்(போலாந்து) முதல் 118வது ரேங்கில் உள்ள ருமேனியா வீராங்கனை மிகேலா வரை உள்ள 104 பேர் நேரடியாக தேர்வு பெற வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதாலும், அதற்கு பெலாரஸ் ஆதரவாக இருப்பதாலும் அந்த 2 நாடுகளை சேர்ந்தவர்கள் இங்கிலாந்து வர அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. அதனால், தரவரிசையில் முன்னணியில் இருந்தாலும் ‘ரஷ்யா, பெலாரஸ்காரர்கள் விம்பிள்டன்னில் விளையாட முடியாது. ‘எல்லாம் அரசின் முடிவுதான்’ என்று விம்பிள்டன் நிர்வாகம் கைவிரித்து விட்டது.

அதனால் ரஷ்யாவின் டாரியா கசட்கினா(13வது ரேங்க்), வெரோனிகா(22), ஏக்தெரினா(28), பெலாரசின் சபலென்கா(6),  அசரென்கா(20), செஸ்னோவிச்(34) என முன்னணி வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்க மாட்டார்கள். அதிலும் ஆடவர் பிரிவில் உலகின் நெம்பர் ஓன் வீரர் டானில் மெத்வதேவ்(ரஷ்யா) விளையாட மாட்டார். அதேபோல் ரஷ்ய வீரர்கள் ரூபலேவ்(8வது ரேங்க்), கச்சனோவ்(22), அஸ்லன்(43) பெலாரஸ் வீரர் லவாஸ்கா(40) என பட்டியல் நீளுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பிறகும் ரஷ்யா, பெலாரஸ் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தடை விதித்தது. ஆனாலும் டென்னிஸ் போட்டிகளில் இரு நாட்டுகாரர்களும் தங்கள் நாட்டின் பெயர், கொடியை குறிப்பிடாமல் ஐரோப்பிய நாடுகளிலும் விளையாடி வருகின்றனர்.

* தரவரிசை புள்ளிகள்  இல்லை

இந்தப்போட்டியில் வெற்றிகளுக்கு தரப்படும் தரவரிசைப் புள்ளிகள் கிடையாது. சாம்பியன் பட்டம் பெறுபவருக்கு அதிகபட்சமாக 2ஆயிரம் புள்ளிகள் கிடைக்கும். அப்படி கிடைத்தால், ஜோகோவிச் மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறலாம். ஆனால் தரவரிசைப் புள்ளிகள் இல்லை என்பதால் இந்திய வீரர் ரோகன் போபண்ணா உட்பட பல வீரர்கள் விம்பிள்டன்னில் விளையாட ஆர்வம் காட்டவில்லை.

* அமெரிக்காவும் தடை விதிக்கணும்

இந்த 2 நாட்டு வீரர்களுக்கு, அடுத்து அமெரிக்காவில்  நடக்க உள்ள யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் பங்கேற்க தடையில்லை. ‘அங்கும் இந்த 2 நாட்டுக்காரர்களுக்க தடை விதிக்க வேண்டும்’ என்று உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா ஆதரவு திரட்டி வருகிறார்.

Related Stories: