14 ஆண்டில் இல்லாத வகையில் கடந்தாண்டு சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் டெபாசிட் பணம் அதிகரிப்பு.!

புதுடெல்லி: கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத வகையில் சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் டெபாசிட் தொகை பல மடங்கு அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. சுவிட்சர்லாந்தின் மத்திய வங்கி (என்என்பி) வெளியிட்ட ஆண்டு  அறிக்கையில், ‘சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் சேமிப்பு பத்திரங்கள்,  வைப்புப் தொகை அதிகரித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு இறுதி வரை சுவிஸ்  வங்கியில் இந்தியர்களின் பணம் ரூ.20,700 கோடியாக இருந்தது (2.55 பில்லியன்  சுவிஸ் பிராங்குகள்).

கடந்த இரண்டு ஆண்டு சரிவுக்கு இந்திய வாடிக்கையாளர்களின் சேமிப்பு அல்லது டெபாசிட் கணக்குகளில்  வைத்திருக்கும் பணம் கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்து சுமார்  ரூ.4,800 கோடியாக உயர்ந்தது. கடந்தாண்டு மட்டும், கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 3.83 பில்லியன் சுவிஸ் பிராங்குகளுக்கு (ரூ. 30,500 கோடிக்கு மேல்) டெபாசிட் உயர்ந்துள்ள. 2020ம் ஆண்டை காட்டிலும் 2021ம் ஆண்டுல் சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் பிற நிதி நிறுவனங்களிலும் உள்ள சுவிஸ் வங்கிகளின் கிளைகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணமும் இதில் அடங்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் வங்கிகளில் ெடபாசிட் செய்யும் பணத்தை, அந்நாடு கருப்புப் பணமாக கருதவில்லை. வரி ஏய்ப்புக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைய சுவிட்சர்லாந்து ஆதரிப்பதாக அந்நாடு கூறியுள்ளது. சுவிஸ் வங்கியில் உள்ள டெபாசிட் பட்டியலில் இந்தியா 44வது இடத்தில் உள்ளது. புள்ளிவிபரங்களின்படி, சுவிஸ் வங்கியில் ெடபாசிட் செய்துள்ள வெளிநாட்டு வாடிக்கையாளர்களில் முதல் 10 நாடுகளின் பட்டியலில், மேற்கிந்திய தீவுகள், ஜெர்மனி, பிரான்ஸ், சிங்கப்பூர், ஹாங்காங், பஹ்மாஸ், நெதர்லாந்து, கேமன் தீவுகள், சைப்ரஸ் ஆகிய நாடுகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: