விளாத்திகுளம்: குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவரிடம் ஆசிரியை சாதி ரீதியாக பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பு

விளாத்திகுளம்: விளாத்திகுளம் மாவட்டம் குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவரிடம் ஆசிரியை கலைச்செல்வி சாதி ரீதியாக பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆடியோவில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பொறுப்பு குறிப்பிட்ட சாதியினருக்கு செல்லக்கூடாது என ஆசிரியை பேசியதற்கு ‘எல்லோரும் சமம்தானே’ என மாணவர் பதில் அளித்துள்ளார். மாணவரின் சாதியை சேர்ந்தவர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என ஆசிரியை பேசுவதும் ஆடியோவில் பதிவாகியுள்ளது. சாதி ரீதியாக பேசிய ஆசிரியை கலைச்செல்வி மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: