மேகதாது விவகாரத்தில் ஒன்றிய அரசை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம்: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேச்சு

சென்னை:தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் உதய்பூர் காங்கிரஸ் கொள்கைப் பிரகடனம் என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சி முகாம் மாமல்லபுரம் அடுத்த கிருஷ்ணன் காரணையில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் நேற்று துவங்கியது. இந்த, இரண்டு நாள் பயிற்சி முகாமை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குத்து விளக்கேற்ற துவக்கி வைத்தார். பின்னர், நிருபர்களிடம் பேசியதாவது,  இந்த, பயிற்சி முகாம் பொருளாதாரம், விவசாயம் சமூகநீதி ஆகியவற்றைப் பற்றி ஆலோசிப்பதற்காக நடக்கிறது. உதய்பூரில், சோனியா காந்தி எவ்வாறு இந்த முகாமை நடத்தினார்களோ அதேபோன்று இங்கு நடந்து கொண்டிருக்கிறது. பாஜ, அதிமுக தவறான கொள்கைகளை கடைபிடிக்கிறார்கள். ஆன்மிகவாதிகள் என்ற பெயரில் ஆதீனங்களும் சில சாமியார்களும் நேற்று முன்தினம் ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் கடுமையாக பேசியுள்ளனர்.

எங்களைவிட, இந்து மதம் மீதும், இந்து கடவுள் மீதும் நம்பிக்கை உடையவர்கள் யாராவது உள்ளார்களா. இந்து, அறநிலைத்துறை இருக்கக்கூடாது என்றால் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் கோவிலுக்குள் விடக்கூடாது என்பீர்கள். மேகதாது, அணைக்கு எதிராக ஒன்றிய பாஜ அரசு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளது. கர்நாடக, அரசின் வரைவு அறிக்கைக்கு அனுமதி வழங்கி இருக்கிறார்கள். இது மிகப்பெரிய, ஒரு தவறு. இதை, எதிர்த்து தமிழக காங்கிரஸ் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம். போராட்டத்துக்கான தேதி நாளை (இன்று) அறிவிக்கப்படும். இவ்வாறு  கே.எஸ். அழகிரி இவ்வாறு பேசினார். இந்த, முகாமில் அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், எம்பிக்கள் கார்திக் சிதம்பரம், ஜோதிமணி, விஜய் வசந்த், எம்எல்ஏக்கள் செல்வபெருந்தகை, விஜயதாரணி, ரூபி மனோகரன், முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் இளங்கோவன், தங்கபாலு, மூத்த நிர்வாகி கோபண்ணா உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: