முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாட்டம்

திருவள்ளூர்: முகப்பேரில் உள்ள வேலம்மாள் முதன்மை பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடுதல் இயக்கத்தை கோ கிரீன் மிஷனில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் அசோகா ட்ரீ தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் ஐஓசிஎல் மனிதவள பொது மேலாளர் பாலகிருஷ்ணன் நாயக், தி.அசோகா ட்ரீ என்ஜிஓ ஸ்ரீமதி ஸ்ரவண ராஜன், பள்ளியின் முதன்மை முதல்வர் கே.எஸ்.பொன்மதி ஆகியோர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினர்கள் மரங்களை வளர்ப்பதன் முக்கியத்துவம், எதிர்காலத்தில் இயற்கையை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து உரையாற்றினர்.

மேலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் நாம் வாழும் இடத்தை சிறந்த சுற்றுச் சூழலுடன் எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். இதனைத்தொடர்ந்து நடப்பட்ட மரக் கன்றுகளை பராமரித்தல். அதிக அளவு மரங்களை நடுதல், மற்றவர்களையும் அவ்வாறு ஊக்குவிப்பது போன்று பல்வேறு நிகழ்ச்சிகள் மாணவர்களால் நிகழ்த்திக் காட்டப்பட்டது. மாணவர்கள் பசுமை உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

Related Stories: