வாடிப்பட்டி பகுதியில் முதல்போக சாகுபடி பணிகள் ஆரம்பம்

வாடிப்பட்டி : வாடிப்பட்டி பகுதியில் முதல் போக நெல் சாகுபடி பணிகள் தற்போது துவங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.திண்டுக்கல் மாவட்டம் பேரணை முதல் மதுரை மாவட்டம் கள்ளந்திரி வரையிலான சுமார் 45 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான முதல் போக நெல் சாகுபடி விளை நிலங்கள் பயன்பெறும் வகையில் வைகை அணையில் இருந்து கடந்த 2ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

திறந்துவிடப்பட்ட தண்ணீர் முல்லைப் பெரியாறு பிரதான கால்வாய் மூலம் விளைநிலங்களை சென்றடைந்துள்ள நிலையில் சாகுபடி பணிகளை விவசாயிகள் துவக்கியுள்ளனர். முதல் கட்டமாக வயல்வெளிகளில் நாற்றாங்கால் பாவுதல், தொலி அடித்தல் உள்ளிட்ட முக்கிய முதல் பணிகளை தற்போது விவசாயிகள் முழுவீச்சில் செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் உரிய நேரத்தில் முதல்போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் இப்பகுதி விவசாயிகள் ஆர்வத்துடன் பணிகளை துவக்கியுள்ளனர். இருப்பினும் விவசாயிகளின் தேவைக்கேற்ப யூரியா, காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்களை போதியளவு தடையின்றி கிடைப்பதை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: