புதுச்சேரி வீட்டு வசதி வாரியம் கட்டிய அடுக்குமாடிகள் சேதம்: வீட்டு பாத்திரம் வழங்க கூடுதல் தொகை கேட்பதாக பயனாளிகள் புகார்

புதுச்சேரி: புதுச்சேரி வீட்டு வசதி வாரியம் கட்டி கொடுத்த அடுக்கு மாடி குடியிருப்புகள் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாக பயனாளிகள் புகார் தெரிவித்தனர். சுதந்திரப் பொன் விழா நகரில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு 2012ம் ஆண்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசு கட்டி கொடுத்த வீட்டுக்கான தொகையை பயனாளிகள் முழுமையாக செலுத்திய பிறகும். வீட்டுக்கான பத்திரம் இன்னும் வழங்கப்படவில்லை. இது தொர்பாக முறையிட்ட பொது வீடுகளுக்கு கூடுதல் தொகை கேட்பதாக பயனாளிகள் தெரிவித்தனர்.

மேலும் பிரச்சனை நீதிமன்றம் சென்று தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்த நிலையிலும். வீட்டு பாத்திரம் கொடுக்காமல் அதிகாரிகள் அலைக்கழிப்பதாக பயனாளிகள் தெரிவித்தனர். சுதந்திரப் பொன் விழா நகரில்  432 சதுராடி கொண்ட வீட்டினை ரூ. 11 லட்சம் 960 சதுராடி வீட்டினை ரூ. 32 லட்சம் வாங்கியதாக பயனாளிகள் தெரிவித்தனர். கூடுதல் தொகை கேட்பது நியாயமில்லை என்று கூறிய அவர்கள் தனியார் கட்டுமானம் நிறுவணம் ஒன்று புதுச்சேரி அரசு நடந்து கொள்வதாக குற்றம் சாட்டினார். வீட்டு பாத்திரத்தை கூடுதல் சேதம் அடைந்த வீட்டுகளை தாங்களே செறி செய்து கொள்வதாக அவர்கள் கூறினார்.

Related Stories: