அண்ணாசாலையில் லாரி மோதி நுண்ணறிவுப்பிரிவு காவலர் படுகாயம்

சென்னை: சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் நுண்ணறிவுப்பிரிவு காவலராக நந்தகுமார்(33) என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு 11.30 மணி அளவில் அண்ணாசாலையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு தனது பைக்கில் கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் உள்ள தனது வீட்டிற்கு சென்று சென்று கொண்டிருந்தார். அண்ணாசாலை ஆனந்த் திரையரங்கம் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் அடையாளம் தெரியாத லாரி ஒன்று எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற நுண்ணறிவு பிரிவு காவலர் சென்ற பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயமடைந்த நந்தகுமார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாசாலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மீட்டு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற லாரி ஓட்டுனரை சிசிடிவி பதிவு மூலம் தேடி வருகின்றனர்.

Related Stories: