பொன்னமராவதி அருகே ஏகாளியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழாவில் மஞ்சுவிரட்டு

பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு உள்ளிட்ட போட்டிகள் கடந்த ஜனவரி 13ம் தேதி தைபொங்கல் விழாவையொட்டி கந்தர்வகோட்டை தாலுகா தச்சங்குறிச்சியில் தொடங்கியது அன்றிலிருந்து இன்று வரை கோயில் திருவிழா, பொங்கல் திருவிழா என்றாலே ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு என தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் மே 31ம் தேதி நேற்று வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கீழவேகுபட்டியில் பொதுமக்களும், இளைஞர்களும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் ஏராளமானோர் குவிந்தனர்.

கீழவேகுப்படியில் கோயிலில் வழிபாடு செய்த பின்னர் ஊர் முக்கியஸ்தர்களால் ஜவுளி எடுத்து வரப்பட்டு கீழவேகுபட்டி பெரிய கண்மாயில் அமைக்கப்பட்டிருந்த மாட்டுதொழுவத்தில் இருந்து திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. மஞ்சுவிரட்டு போட்டியில் விழா கமிட்டியார்கள் சார்பாக பங்கேற்ற காளைகளுக்கு வேஷ்டி துண்டு அனிவிக்கப்பட்டது.பொன்னமராவதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் 5 பேருக்கு சிறு காயம் ஏற்பட்டது.

Related Stories: