உலக அளவில் வலுவான விமானப்படை இந்தியாவுக்கு 3வது இடம்: தளபதி பெருமிதம்

புனே:மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் (என்டிஏ) 142வது பிரிவினரின் பயிற்சி நிறைவு அணிவகுப்பில் பங்கேற்ற விமானப்படை தளபதி விஆர். சவுதாரி பேசியதாவது: நாட்டின் வலிமை வாய்ந்த ராணுவம், விமானம் மற்றும் கப்பற்படை ஆகிய 3 சேவைகளும் அடுத்த தலைமுறைக்காக போரிடும் இயந்திரங்களில் அதிக முதலீடு செய்துள்ளன. புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றுவதால், அதற்கேற்ப நமது போர் முறைகளில் புதுமையை புகுத்த வேண்டும். உலகின் வலிமை வாய்ந்த விமானப்படைகளின் தரவரிசை குறியீட்டில், இந்திய விமானப்படை 3ம் நிலைக்கு உயர்ந்துள்ளது. இது விமானப்படையின் செயல்பாடுகள், மேலாண்மை மற்றும் பராமரிப்பைத் திட்டமிட உதவும். இந்திய விமானப்படையிடம் ஆறு வெவ்வேறு நாடுகளின் விமானங்கள் மற்றும் நிறைய உள்நாட்டு தயாரிப்புகள் உள்ளன. இதுவே விமானப்படையை 3வது இடத்துக்கு உயர்த்தி இருக்க கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: