கோவையில் பிரபல ஓட்டல் கிளைகளில் வருமான வரித்துறை ரெய்டு

கோவை: கோவையில் பிரபல ஓட்டல்களில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். கோவையில் லட்சுமி மில் சந்திப்பு, சுந்தராபுரம், ராம்நகர், ஆர்.எஸ்.புரம், வடவள்ளி, காந்திபுரம், புரூக் பாண்ட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டல் ஆனந்தாஸ், கிளைகள் இயங்கி வருகிறது. இந்த ஓட்டலில் ேநற்று காலை முதல் வருமானவரித்துறை சோதனை நடந்தது. மொத்தம் 40 குழுக்களாக பிரிந்து நகரில் உள்ள 8 ஓட்டல்கள், ஓட்டல் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் இனிப்பு பலகார கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கிடைத்த புகாரின் பேரில் இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. சில இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனைக்கு சென்ற போது ஓட்டல் நிர்வாகத்தினர் அனுமதி வழங்கவில்லை. போலி வருமான வரித்துறை அதிகாரிகள் என நினைத்து போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். போலீசார் அங்கு வந்து உண்மையான வருமான வரித்துறை அதிகாரிகள் என தெரிவித்த பின், ஓட்டல் நிர்வாகத்தினர் வருமானம் தொடர்பாக தகவல்களை தெரிவித்தனர்.

ஓட்டல்களில் பில்கள் முறையாக வழங்கப்பட்டதா? ஜி.எஸ்.டி எவ்வளவு போடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இருந்து இதுவரை எவ்வளவு வருவாய் பெறப்பட்டது, வருவாய் விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளதா?, அதற்கு முறையான வருமான வரி தாக்கல் செய்யப்பட்டதா?, வருமானம் செலுத்தாமல் எவ்வளவு ெதாகை மறைக்கப்பட்டிருக்கிறது என அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Related Stories: