ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு சலுகைதானே தவிர உரிமையாக கோர முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகாவில் உள்ள கேசவ ராஜபுரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றும் ஜமுனாராணி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், திருவொற்றியூர் அன்னை சிவகாமி நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் காலியாகும் தலைமை ஆசிரியர் பணியிடத்திற்கு இடமாற்றம் பெறும் வகையில் மே 31ம் தேதிக்கு முன் சிறப்பு கலந்தாய்வுக்கு தன்னை அழைக்கும்படி பள்ளிக்கல்வித்துறையிடம் கோரிக்கை வைத்தோம்.

ஆனால், எங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை. எனவே, சிறப்பு கலந்தாய்வுக்கு அழைக்குமாறு தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் ஆஜரானார். அதற்கு அரசு சிறப்பு அரசு பிளீடர் பால தண்டாயுதம், உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் ஏதும் காலி இல்லை என்பதால் மனுதாரரை கலந்தாய்வுக்கு அழைக்கவில்லை என்று தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, பணியிட மாற்றம் மற்றும் பணிநியமன் என்பதை சலுகைகளாக பெற உரிமை கோர முடியாது. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

Related Stories: