கூண்டு வைத்து பறவைகளை பிடித்தவர் கைது

பழநி: பழநியில் கூண்டு 8வைத்து பறவைகளை பிடித்த வேட்டைக்காரரை வனத்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் பெரிய வனப்பரப்பை கொண்டது பழநி வனச்சரகம். இந்த வனச்சரகத்தில் வரிப்புலி, சிறுத்தை, கரடி, மான், கேளையாடு, யானை உள்ளிட்ட விலங்குகள் அதிகளவில் உள்ளன. இங்கு வனவிலங்குகள் மற்றும் பறவைகள் வேட்டையாடப்படுவதை தடுக்க வனத்துறையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குமாரசமுத்திரகுளத்தில் பறவைகளை கூண்டு வைத்து பிடித்து கொண்டிருந்த ஆவணி மூல வீதியைச் சேர்ந்த மாரிக்கண்ணு(46) என்பவரை பழநி வனத்துறையினர் கைது செய்தனர்.

பின்னர் அவரிடமிருந்து 11 முனியாசு பறவைகள், 1 கூண்டு, 2 வலை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், வன உயிரின வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. வனத்தில் இருந்து பிடித்து வரும் பறவைகளை வாங்கும் பொதுமக்கள் மீதும் வனச்சட்டம் பாயும் என வனச்சரகர் பழனிக்குமார் எச்சரித்துள்ளார்.

Related Stories: