ஆதனக்கோட்டை பகுதியில் தென்னையில் ஊடு பயிராக சோளப்பயிர் சாகுபடி

கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை பகுதியில் தென்னையில் ஊடுபயிராக விவசாயிகள் சோளம் பயிர் செய்துள்ளனர்.இப்பகுதி விவசாயிகள் அதிகப்படியாக தென்னை சாகுபடி செய்துள்ளார்கள் இந்த தென்னைமரங்கள் ஐந்து ஆண்டுகளில் காய்க்க தொடங்கிவிடும்.இதே சமயம் தென்னை தோப்பில் புல், பூண்டு, களை இல்லாமல் முறையாக தண்ணீர் பாய்ச்சி பராமரிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

இந்த நிலத்தில் ஊடுபயிராக சோளம் ,உளுந்து போன்ற சிறுதானியங்கள் பயிர் செய்து வருகிறார்கள். ஊடுபயிர்களுக்கு பாய்ச்சும் தண்ணீர் வீணாகாமல் தென்னைமரங்கள் நன்கு பயனடைகிறது. மேலும் நிலத்தில் களை இல்லாமல் இருப்பதால் தென்னை கன்றுகள் நன்கு பராமரிப்பில் வளர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே காய்க்க தொடங்கிவிடும் என்றும் போதிய இடைவெளியுடன் தென்னை மரங்கள் இருப்பதால் இந்த நிலங்களில் எந்த காலத்திற்கும் ஊடுபயிர் செய்யலாம் என்றும் கூறுகிறார்கள். இந்த நிலத்தின் நிழல் தாக்கம் குறைவாக தான் இருக்கும் என்றும் இந்த நிலங்களில் ஊடு பயிர் செய்ய ஏற்ற வகையில் தென்னை நடவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

Related Stories: