திமுக பிரமுகர் கொலை வழக்கில் கைதான 3 பேருக்கு 2 நாள் போலீஸ் காவல்

தண்டையார்பேட்டை: மணலியை சேர்ந்தவர் சக்ரபாணி(65), பைனான்ஸ் தொழிலுடன், மணலி 7வது வார்டில் திமுக மாவட்ட பிரதிநிதியாக இருந்து வந்துள்ளார். கடந்த 10ம் தேதி வட்டி பணம் வசூல் செய்ய ராயபுரம் பகுதிக்கு சென்ற சக்ரபாணி மாயமாவிட்டார். புகாரின்பேரில் மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் சாக்கு பையில் அடைத்து வைத்திருப்பதும், அவரது தலை காணாமல்போனதும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, தமீம்பானு (39), அவரது தம்பி வாசிம் பாஷா (37), ஆட்டோ டிரைவர் டில்லிபாபு (30) ஆகியோரை கைது செய்தனர். சிறையில் உள்ள 3 பேரையும் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நேற்று நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

Related Stories: