சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோவில் வாலிபர் கைது

பெரம்பூர்: ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த 47 வயது பெண் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த ஆண்டு  அக்டோபர் மாதம் புகார் மனு அளித்திருந்தார். அதில் `எனது 17 வயது மகளுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்று காண்பித்தபோது அவள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்தது’ என கூறியிருந்தார். விசாரணையில், ஓட்டேரி எஸ்.வி.எம் நகர் பகுதியை சேர்ந்த ஜெகன்(38), சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து நேற்று புளியந்தோப்பு சரக உதவி ஆணையரின் தனிப்படை போலீசார் ஜெகனை கைது செய்து அவரை புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து ஜெகன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

Related Stories: