சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா பக்தர்களுக்கான வசதியை மேம்படுத்த கோரிக்கை

வத்திராயிருப்பு : மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது. அமாவாசை, பௌர்ணமிக்கு தலா மூன்று நாட்கள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என மாதத்திற்கு எட்டு நாட்கள் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் பிரசித்திபெற்ற ஆடி அமாவாசை திருவிழா ஜூலை 28ம் ேததி நடைபெறவுள்ளது. இவ்விழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்கதர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவர்.

தாணிப்பாறை விலக்கிலிருந்து தாணிப்பாறை வரை செல்ல லிங்கம் கோயில் ஓடைப்பாலம் உள்ளது. ஆனால், பாலத்தில் பாலத்தில் இருபுறமும் மண் சரியாக போடப்படாததால் விபத்து ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே, பாலத்தில் இருபுறமும் இரண்டு வாகனங்கள் விலகி சென்று வருமாறு அகலப்படுத்தி, தடுப்பு சுவர் கட்டி பாதுகாப்பான நிலையை ஏற்படுத்த வேண்டும். அதுபோல், தாணிப்பாறை செல்லும் வழியில் நிரந்தர பஸ் ஸ்டாண்ட் அமைத்து ஆண்கள், பெண்கள் தனித்தனியாக குடிநீர் வசதி, கழிப்பறைகள், குளியல் அறைகள், பக்தர்கள் தங்கி செல்லுவதர்கான அறைகள், பக்கதர்களின் உடமைகளின் பாதுகாப்பு அறைகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

ஆடி அமாவாசைக்கு சில நாட்களே உள்ள நிலையில் தற்காலிக பஸ் ஸ்டாண்டை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, சிறப்பு பஸ்கள் சிரமமின்றி வந்து செல்ல வசதிகளை செய்ய வேண்டும்.பக்தர்களின் வருகைக்கேற்ப பார்க்கிங் வசதியை ஏற்படுத்த வேண்டும். பழுதடைந்துள்ள தாணிப்பாறை வனத்துறை கேட்டை சாிசெய்ய வேண்டும். தாணிப்பாறை விலக்கிலிருந்து தாணிப்பாறை அடிவாரம் வரை, மகாராஜபுரம் விலக்கிலிருந்து தாணிப்பாறை செல்லும் வழியில் சோலார் மின் விளக்குகள் அமைக்க வேண்டும்.

போக்குவரத்து நெருக்கடியைத் தவிர்க்கவும், கூட்டநெரிசல் இல்லாமல் பக்தர்கள் சென்று வருவதற்கும் சம்மந்தப்பட்ட மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய இரண்டு மாவட்ட நிர்வாகத்தினர் இடங்களை ஆய்வு செய்து பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: