திருப்பதியில் ஆலோசனை கூட்டம் வீடு கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்-துணை முதல்வர் உத்தரவு

திருப்பதி : திருப்பதியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஜெகன் அண்ணா வீடு கட்டும் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் துணை முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

திருப்பதி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில துணை முதல்வர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அப்போது, அவர் பேசியதாவது:

அனைத்து மக்களும் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நமது முதல்வர் ஜெகன்மோகன் நவரத்தினா திட்டத்தை அமல்படுத்தினார். இதனால், மாநில மக்கள் அதிக பலன்களை பெற்று மகிழ்ச்சியாக உள்ளனர். ஜெகன் அண்ணா வீடு கட்டும் பணிகளை விரைந்து முடித்து பயனாளிகளுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய வீடுகளை வழங்க வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

இதில், சுற்றுலாத்துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜா, எம்பி  குருமூர்த்தி, எம்எல்ஏ கருணாகரன், காளஹஸ்தி எம்எல்ஏ மதுசூதனன், கூடூர்  எம்எல்ஏ வரப்பிரசாத், திருப்பதி கலெக்டர் வெங்கடரமணா, இணை கலெக்டர் பாலாஜி  உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: